இஸ்ரேல்-பலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்புதல்

187
0
Spread the love

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட 142 நாடுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

நியூயோர்க் பிரகடனம் என்ற பெயரில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு இந்த பிரகடனம் ஓர் புதிய முயற்சியாக உள்ளது.

இஸ்ரேல் மற்றும் அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட 10 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளன.

இதேவேளை 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த பிரகடனம் ஹமாஸ் அதன் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here