ஈழத்தமிழர்களுக்கு பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவாவில் பேரணி

118
0
Spread the love

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப்படுகொலைக்கு நீதி மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை

முன்வைத்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (15.09) பாரிய பேரணி இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதற்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்த பேரணியில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here