ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி

153
0
Spread the love

2025 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில்,150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here