ஹொரனை – இரத்தினபுரி வீதியில் விபத்து – 15 பேர் வைத்தியசாலையில்

169
0
Spread the love

ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று முற்பகல் (16.09) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here