தங்காலையில் சுமார் 200 கிலோ கிராம் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

183
0
Spread the love

தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லொறி ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.

லொறியில் இருந்த போதைப்பொருட்களின் சரியான அளவு இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றும், அந்த போதைப்பொருளின் அளவு 200 கிலோ கிராமை விட அதிகரிக்கலாம் என்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here