நூதனமான முறையில் உடலில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் பலாலி விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்த பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துத் தங்கத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவகையில்,
கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர், சென்னையில் இருந்து, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு
திரும்பிய போது,
பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, குறித்த பெண் சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து அப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்து, சிகிச்சை அளித்துத் தங்கத்தை மீட்டுள்ளனர்.
குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.







