ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் இன்று ஜனாதிபதி உரை

160
0
Spread the love

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்ற உள்ளார்.

இதன்படி, அமெரிக்க நேரப்படி இன்று (24.09) பிற்பகல் 3.15 க்கு ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன்
இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து புறப்பட்டு ஜனாதிபதி , நேற்று (23.09) அமெரிக்காவை சென்றடைந்தார்.

அமெரிக்க நேரப்படி காலை 8:50 அளவில் அமெரிக்காவின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here