சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

135
0
Spread the love

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (30.09) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திககி நடந்த போராட்டத்தின் போது, ​​சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணியொன்றில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.

அந்த சொத்துக்களுக்கான இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் சில அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து இழப்பீட்டை செலுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது 8,850,000 ரூபாவை இழப்பீடாக பெற்றதன் ஊடா கபொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்த காரணத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here