தங்கத்தின் இன்றைய நிலவரம்

268
0
Spread the love

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30.09) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக ,இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 306,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 283,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வார இறுதியில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 301,000 ரூபாவுக்கு விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here