சாவகச்சேரியில் வாகன விபத்து – இருவர் வைத்தியசாலையில்

241
0
Spread the love

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சாவகச்சேரி நுனாவில் வைரவர் கோயில் சந்தியில் இன்று மாலை (30.09) இந்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இதன்போது காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர்கள் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here