காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம்

182
0
Spread the love

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பா இன்று (10.03) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் முறையற்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும்
எதிர்ப்பு தெரிவித்து இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சிவில் அமைப்புகள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, போராட்டக்காரர்கள், மன்னார் தீவுக்குள் காற்றாலை திட்டம் வேண்டாம், அள்ளாதே அள்ளாதே, எங்கள் மண்ணை அள்ளாதே’ விவசாயத்தை புதைத்து மின் உற்பத்தி தேவையா, இலங்கை மக்களின் நிலங்களை பறித்து அந்நிய நாட்டுக்கு வழங்குவது அபிவிருத்தியா என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here