தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவற்றை மீட்டிருந்தனர்.
அதன் போது பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன், ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் 67 கைப்பற்றப்பட்டுள்ளது.
அவற்றில் 37 துப்பாக்கி ரவைகளில் KPI என எழுதப்பட்டுள்ளது.
KPI என்பது பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான கஞ்சி பானை இம்ரான் என்பதனை குறிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









