யாழ்ப்பாணத்தில் அரச பேருந்துகள் ஒழுங்கின்மையால் அவதியுறும் மக்கள்

124
0
Spread the love

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கோவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று (03.10) பலமுறை பழுதடைந்து வீதியில் நின்றதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்துள்ளது. பின்னர் சீர்செய்யப்பட்டு மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த
பேருந்து மீண்டும் தொழினுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.

அதிகளவான பயணிகளை ஏற்றி சென்ற குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் தொழினுட்ப கோளாறுக்கு உள்ளானதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

குழந்தைகளுடன் இரவு வேளையில் பலர் வீதியில் இருப்பதை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்களின் தொடர் கோரிக்கையான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனாலும் மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த அவல நிலையை கருத்திற்கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய அரச பேருந்தை சேவையில் ஈடுபடுத்துமாறும்
பருத்தித்துறைக்கு வரவிருக்கும் போக்குவரத்து அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூ. லின்ரன்

யாழ்ப்பாண செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here