தமிழர் பிரதேசத்தில் T56ரக ஆயுதம் கண்டுபிடிப்பு

185
0
Spread the love

கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் கடந்த 02 ம் திகதி T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டாம் திகதி மனிதாபிமான கன்னி வெடி அகற்றும் நிறுவனமான ஹலோ டிரஸ்ட் நிறுவனம் தமது பணியினை இத்தாவில்
பகுதியில் மேற்கொண்ட போது இந்த துப்பாக்கியினை கண்டெடுத்துள்ளனர்.

அதன் பின்னர் உடனடியாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பளை பொலிஸால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதனை அகழ்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here