விமான நிலையத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்கள் பறிமுதல்

175
0
Spread the love

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (5.10) அதிகாலை 05.25 க்கு ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் UL-226 என்ற
விமானத்தின் ஊடாக டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30,000 சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான சந்தேகநபர் புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here