மன்னார்–மதவாச்சி A14 பிரதான வீதியின் இசைமாலைத் தாழ்வுப் பகுதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை சுமார் 4.35 மணியளவில், மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கிப் பயணித்த டிமோ பிக்கப் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 14 பேரும் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







