வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா

117
0
Spread the love

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா இன்று (05.10) சிறப்பாக இடம்பெற்றது.

கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு கிரகங்களை மேற்கொண்டு காலை 7:30 அளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதை தொடர்ந்து 9:30 அளவில் வல்லிபுர
ஆழ்வார் தேர் உலா வந்தார்.

முன்னை ஆஞ்சநேயப்பெருமான் செல்ல பின்னே விநாயகப்பெருமானும், லங்மி தேவியை தொடர்ந்து வல்லிபுரத்து
சக்கரத்து ஆழ்வார் வலம்வந்தார்.

இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதட்டஷனை, பால் காவடி, செடில்காவடி, தீச்சட்டி உட்பட்ட பல்வேறு நேற்றிக்கடன்களை நிறைவேற்றினர்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து மற்றும் மக்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர்
தலமையில் பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நேரடியாக கண்காணித்து செயற்படுத்தினர்.

ஒருவழிப்பாதை நடைமுறை நாளை (06.05) வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத்திருவிழாவின்
போதும் நடைமுறைப்படுத்தப்படும் என காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here