தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் போராட்டம்

196
0
Spread the love

யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் (6.10) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினமும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், கைகளில் கறுப்பு கொடிகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், பொதுமக்கள் மற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here