பேருந்துகளில் அடுத்த மாதம் 30ஆம் திகதி முதல் பற்றுச்சீட்டு இயந்திரங்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08.10) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இதனூடாக வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள வரவு மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் கட்டணங்களைச் செலுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த திட்டம் இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் படிப்படியாக நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இயந்திரம் ஊடாக பற்றுச்சீட்டு வழங்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் இத்திட்டம் முதற்கட்டமாக செயற்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து மைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.







