கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 08 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 61 பேர் காயமடைந்துள்ளதாகவும், காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் குறித்து எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் மூன்று நாட்களாக இடம்பெற்று வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் தாக்குதல்கள் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
70 ஆயிரத்தை அண்மித்ததாக கூறப்படுகிறது.
மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







