யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை தொடர்பான சர்ச்சைக்கு எதிர்வரும் சில வாரங்களுக்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மத விவகாரங்கள் அமைச்சு மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து தையிட்டி விகாரை பிரச்சினை தொடர்பான அறிக்கையைத் தயார் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கமைய, விரைவில் தையிட்டி விகாரை பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் விமான நிலையத்தின் ஓடுதளத்தை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.







