50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

127
0
Spread the love

மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த
மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னரே இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்
சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில்
மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனியுடன் கூடிய வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here