இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி

121
0
Spread the love

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில் நேற்று (11.10) இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை குவித்தது.

254 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 45.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி, தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here