விளிம்பு நிலைச் சமூகத்தினரின் சமூக ஈடுபாடு மற்றும் அரசியல் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கிலான கலந்துரையாடலொன்று நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (14.10) காலை 10.00 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசியலில் விளிம்பு நிலைச் சமூகத்தினர் மற்றும் பெண்கள், இளைஞர்கள் உள்வாங்கப்படாமை, அவர்களுக்குத் தலைமைத்துவங்கள் வழங்கப்படாமை, மற்றும் அவர்களின் பங்களிப்பின்மை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன்,எதிர்காலத்தில் அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிதி அனுசரணையுடன் “நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பினால் (VOVCOD)
இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்நிறுவனத்தின் இயக்குநர் தர்மலிங்கம் கணேஸ், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின்(ESDF) திட்ட முகாமையாளர் ரஞ்சன் வடிவேல்
மன்னார் நகர சபைத் தவிசாளர் ஏ.பி.டேனியல் வசந்தன், நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளர் அன்ரன் அன்ரூ ராஜன் , மன்னார் பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள்,விளிம்பு நிலைச் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











