இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்தை அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது – நாமல்

127
0
Spread the love

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டதைப் போன்று, இந்த விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது எனவும் அவர்டி கூறியுள்ளார்.

குற்றவாளிகள் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறிய நாமல் ராஜபக்ச போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி 17 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக துணை அமைச்சரே கூறியிருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் அந்தக் கடவுச்சீட்டுகள் தொடர்பிலான தகவல்களையும் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை விடுவித்தவர்கள் தொடர்பான தகவல்களையும்
அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here