நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
நல்லூரில் உள்ள சிவகுரு ஆதீனத்தில் நேற்று (14.10) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சமகால அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.








