முன்னாள் அமைச்சர் மனுஷ கைது

132
0
Spread the love

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று காலை அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here