வெளிநாட்டு ஆயுதங்களுடன் ஒருவர் கைது

176
0
Spread the love

வெளிநாட்டு ஆயுதங்களுடன் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்ஸ் ரெசிடென்ஸ், மதுகம சாலை, நாகொட பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

நாகொட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர ரக துப்பாக்கி, ஜெர்மன் தயாரிப்பான ஏர் பிஸ்டல், 9 மிமீ ரக துப்பாக்கி ரவைகள், வெடிமருந்துகள், உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here