சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 ஐ அண்மித்தது

53
0
Spread the love

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி காரணமாக, நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டங்கள் உயர் மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here