யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு ஆணும், 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு பெண்ணும் 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







