யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

110
0
Spread the love

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here