முல்லைத்தீவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

121
0
Spread the love

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பரல் என்பன இன்றையதினம் பறிமுதல்

செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்றையதினம் (05.11) தேவிபுரம் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லி லீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரின் வருகையை அறிந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here