மின்னல் தாக்கங்கள் தொடர்பில் நாட்டின் 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





