கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (12.11) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.
அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடனும் மோதிய நிலையில் வீடொன்றின் மதில்மீது மோதி நின்றுள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்





