வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமீர தனுஷ்க டி சில்வா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி அதிவிசேடவர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக பணியாற்றிய லசந்த விக்ரமசேகர, அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.







