2025 ஆம் ஆண்டிற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண இறுதி நிகழ்வு

186
0
Spread the love

2025 ஆம் ஆண்டிற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண (GA CUP) இறுதி நிகழ்வு இன்றையதினம் (14.11) வியாழக்கிழமை, மன்னார் மாவட்ட பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அரச திணைக்களங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முகமாகவும் அரச உத்தியோகத்தர்களின் உள ஆற்றுகையை மேம்படுத்தும் விதத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட அரச திணைக்களங்கள் பங்கேற்றிருந்தன.

குறித்த நிகழ்வில்
பெண்களுக்கான வலைப்பந்து ஆண்களுக்கான கால் பந்து மற்றும் ஆண் ,பெண்களுக்கான கயிறுழுத்தல் போன்றவற்றின் இறுதிச்சுற்று நடாத்தப்பட்டு இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற அணியினருக்கும் ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்குமான வெற்றிக் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் உதவி அரசாங்க அதிபர், மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர்கள்,அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை சமூகத்தினர்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், என800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் 2025 ஆம் ஆண்டுக்கான அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்தினை மன்னார் மாவட்ட சுகாதாரத் திணைக்கள அணியினர் சுவிகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here