குளவிக் கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்

48
0
Spread the love

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று இன்று குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 06 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக சென்றிருந்த மாணவர்கள் குழுவொன்று, மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூட்டை கலைத்தமையால் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நாட்களில் தங்கியிருந்து பங்கேற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here