சிறைச்சாலைக்குள் கைதி மீது கொலை முயற்சி

129
0
Spread the love

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெவுந்தர விஷ்ணு தேவாலயத்துக்கு அருகில் இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை முயற்சியில் ஒரு கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர் தெவுந்தர விஷ்ணு தேவாலயத்துக்கு அருகில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரில் ஒருவரது சகோதரன் ஆவார்.

சிறைச்சாலையில் உள்ள உணவு தட்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here