தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு

194
0
Spread the love

மன்னார் மாவட்டத்தில் தேசிய  நேற்றைய தினம் (22.11) புத்திஜீவிகள் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வானது காலை 10 மணி அளவில் VMCT அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், "இலங்கை நாட்டிலே மிகவும் சிறியதொரு கட்சியாக எங்களுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்து தங்களை பெரியதொரு அரசியல் கட்சிகளாக மார்தட்டிக் கொண்டிருந்த பல அரசியல் கட்சிகளை தோல்வியடையச் செய்து நாட்டிலே மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறோம்.

2019 ஆம் ஆண்டளவிலே எங்களுடைய வாக்கு வங்கிகள் நூற்றுக்கு மூன்று என்ற அடிப்படையிலேயே காணப்பட்டது அவ்வாறு எங்கள் வாக்கு வங்கி குறைந்து இருப்பதற்கு காரணமாக இருந்தது இனவாதம் இல்லாத ஒரே ஒரு தேசிய கட்சியாக எமது கட்சி காணப்பட்டமையே.

இலங்கை கடந்த காலங்களிலே முற்றும் முழுதாக இனவாதத்தால் நிரம்பிக் கிடந்தது. தென் பகுதியில் சிங்கள இனவாதம் வடபகுதியிலே தமிழ் இனவாதம் வேரூன்றி கிடந்தது. சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற இனவாதம் இல்லாது அனைவரும் இலங்கையர்கள் என்னும் கொள்கையை எமது கட்சி பரப்பி இருந்தது.

அந்தக் கொள்கையானது நல்ல கொள்கை என்ற தீர்மானத்திற்கு முழு இலங்கை மக்களுமே வந்திருந்தார்கள். 30 வருடங்களாக சிங்களவர்கள் தமிழர்கள் என்று பிரித்து வைத்தார்கள் அதற்குப்பின் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என்று பிரித்து வைத்தார்கள்.

அந்த வகையில் , இனவாதத்தை முற்றாக எதிர்க்கிறவர்கள் என்ற வகையில் எங்கள் வாக்கு வங்கி குறைந்து காணப்பட்டது. இறுதியிலே அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசியல் அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு கொடுத்தார்கள்.அந்த வகையில் நாங்கள் மக்கள் அனைவரையும் கட்டமைப்பு ரீதியாக ஒழுங்கு படுத்தி இருந்தோம் .

தேவேந்திர முனையில் இருந்து பருத்தித் துறை வரைக்கும் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து கட்டமைப்பு ரீதியாக ஒழுங்குப்படுத்தி தான் அரசியல் அதிகாரத்தை பெற்று இருக்கிறோம் .அரசியல் கட்சி என்ற ரீதியில் பயணத்தை மேற்கொள்வதற்கு போதிய அளவான பணபலமோ செல்வமோ காணப்படவில்லை.

ரூபவாஹிணி போன்ற பிரதான ஊடகங்களும் எங்களுக்கு இருக்கவில்லை. கட்சியை வளர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை பெறவில்லை இலங்கை நாட்டின் மக்களை மாத்திரமே நாங்கள் நம்பி இருந்தோம்.

அந்த வகையில் நாங்கள் மக்களிடையே ஏற்படுத்திய பிரதான கட்டமைப்பே தேசிய புத்திஜீவிகள் (NIO)அமைப்பாகும். மக்கள் விடுதலை முன்னணி கட்சியோடு தேசிய புத்திஜீவிகள் அமைப்பை ஒன்றிணைத்து என் பி பி என்ற ஒரு கட்சியை உருவாக்கி இருந்தோம்.

எங்களுடைய அமைச்சரவையை எடுத்துக் கொண்டால் ஜேவிபி கட்சியில் பயணிக்காத புதிய அமைச்சர்களையும் நாங்கள் உள்வாங்கி இருக்கிறோம்.இந்த புத்தி ஜீவிகள் அமைப்பின் ஆலோசனையின் பேரிலேயே அதனை நாங்கள் கொண்டு வந்தோம்.

அந்த அமைப்பின் ஊடாகவே பல்வேறுபட்ட மக்களை ஒன்று இணைத்து அரசியலமைப்புக்கு வர முடியாது இருந்த பாராளுமன்றத்துக்கு வர முடியாது இருந்து அனைவரையும் ஒன்றிணைத்தோம். இலங்கையில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ வர வேண்டும் என்றால் அவர் பணபலம் பொருந்தியவராகவோ அல்லது அரசியல் பின்புலம் உள்ளவராகவோ இருக்க வேண்டும். அதுதான் இலங்கையின் கலாச்சாரமாக இருந்து வந்தது.

எங்களுடைய கட்சி தான் முதன் முதலில் அந்த நிலையை மாற்றி அமைத்தது. இவ்வாறான மாற்றங்கள் வருவதற்கு பிரதானமான காரணமாக இருந்தது இந்த தேசிய புத்திஜீவிகள் (NIO) என்ற அமைப்புதான்.

எங்களைப் போன்ற கொள்கையுடைய அரசியல் கலாச்சாரம் ஒன்று இல்லை என்று சொன்னால் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மலையக மக்களில் அம்பிகா சகோதரி போன்றவர்கள் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இன மத ஜாதி ரீதியான பாகுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்று நாங்கள் சொல்வதற்கு ஏற்றவாறு செயற்பட்டும் வருகிறோம். அந்த வகையில் அன்றும் இன்றும் என்றும் அதிகாரம் என்பது மக்களிடம் தான் காணப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம் .

அதிகாரத்தை எடுக்கவோ அதை தக்க வைத்துக் கொள்ளவோ வேண்டுமென்றால் மக்களுடன் இருந்தால் மாத்திரமே அது சாத்தியம் எனவே மக்களோடு மக்களாக அரசியல் செய்வது என்பது எமது பிரதானமான ஒரு கொள்கையாகும்.

இந்த தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய மட்ட அமைப்பாளராக ,மாவட்டம் மட்டத்திலும் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் இந்த தேசிய புத்திஜீவிகள் அமைப்பினை உருவாக்க வேண்டும் என்ன நான் எண்ணுகிறேன். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த NIO அமைப்பின் மாவட்ட மட்ட குழுவினை உருவாக்குகின்றோம். அதற்கு அமைவாக தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO) மன்னார் மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் வெறுமனே கல்விமான்கள் மட்டுமல்ல சுயமாக தொழில் செய்து வருகின்ற பல்வேறு ஆற்றல் பொருந்தியவர்களும் இருப்பார்கள் அவ்வாறானவர்களையும் புத்திஜீவிகள் என்றே கருத வேண்டும். புத்திஜீவிகள் என்ற பதத்தினை நாங்கள் சரியான முறையில் நிர்ணயிக்க வேண்டும் வைத்தியர்கள் வக்கீல்கள் பொறியியலாளர்கள் மாத்திரம் தான் புத்திஜீவிகள் என்று எண்ணாமல் சுயமாக தொழில் மேற்கொள்கிறவர்கள் கூட புத்திஜீவிகள் என்ற அமைப்புக்குள் வர முடியும். அத்தோடு இந்த கட்டமைப்பின் மூலமாக எங்களுடைய பிரதேசத்தை மாத்திரம் அல்ல முழு நாட்டையுமே உயர்த்துவதற்கான திட்டங்களை வகுக்க முடியும் என்றார்."

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,Dr.சுந்தரமூர்த்தி கபிலன்,Dr.மிப்ராஸ் ஷாஹிட் NIO அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பொறியியலாளர் விமலேஸ்வரன் நானாட்டான், முசலி பிரதேச சபை தவிசாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பொறியியலாளர்கள் என புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டதோடு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.