கந்தகெட்டிய வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

163
0
Spread the love

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று (24.11)தோல்வியடைந்தது.

கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, இரண்டாவது முறையாகவும் தவிசாளர் ஹர்ஷ ரத்நாயக்க, எவ்வித திருத்தங்களும் இன்றி சபையில் சமர்ப்பித்தார்.

அதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக தமது வாக்குகளை அளித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள், பொது முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது 04 மேலதிக வாக்குகளால் கந்தகெட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தோல்வியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here