தேசிய கரோல் போட்டியில் சுன்னாகம் சென்.அந்தனீஸ் ஆலயம் முதலாம் இடம்

135
0
Spread the love

கிறிஸ்துவ மத அலுவலகள் திணைக்களத்தினால் தேசிய ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் கரோல் பாடல் போட்டிக்கான இறுதி முடிவுகளில் தமிழ் மொழியில் யாழ்ப்பாணம் சுன்னாகம் சென்.அந்தனீஸ் ஆலயம் முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இந்த ஆண்டு  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியை நடத்தியது

இதற்கமைய இந்த போட்டியானது தேசிய ரீதியாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெற்றதுடன் குழுப்பாடலாக அமைந்திருந்தது.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலர் இப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர்.

இப்போட்டியாளர்களின் நலன் கருதி கடந்த 22 – 23 ஆகிய இரு தினங்கள் இரண்டு இடங்களில் தமிழ் பிரிவினருக்கு இப்போட்டிகள் நடைபெற்றன.

இது யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் நடைபெற்றன. 22.11.2025 அன்று காலையில் யாழ்ப்பாணத்திலும் அன்று மாலையில் மன்னாரிலும் இதைத் தொடர்ந்து 23 ந் திகதி காலையில் மன்னாரில் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் யாழ்ப்பாணம்- புத்தளம்- திருகோணமலை- மட்டக்களப்பு- வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து பாடல் குழுக்கள் இதில் பங்குபற்றியிருந்தன.

நடைபெற்ற இந்த போட்டிகளில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த சென்.அந்தனீஸ் ஆலயமும்
இரண்டாம் இடத்தை மன்னார் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயமும்
மூன்றாம் இடத்தை மன்னார் யோசேப் வாஸ் நகர் சென்.சிசிலியா பாடகர் குழாமும் நான்காம் இடத்தை கேஎன்-பாலை மத்திய கல்லூரி
ஐந்தாம் இடத்தை சென்.ஜேம்ஸ் ஆலயம் பெற்றுக் கொண்டன.

இதன் போட்டியின் விதி முறைகளாக அதிகபட்ச நேரம் 03 நிமிடங்கள். பங்கேற்பாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை அனைத்து உறுப்பினர்களும் பாடுவது- வாசித்தல்- பாடல்கள் எழுதுவது மற்றும் இசையமைப்பது உள்ளிட்டவையாக 15 மற்றும் குறைந்தபட்சம் 10. ஆக அமைந்திருந்தது.

கரோல் பாடல் ஒரு புதிய படைப்பாக இருக்க வேண்டும் என்றும் பாடல்வரிகள்- மெல்லிசை- இசை மற்றும் அது வேறு எந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கhது மற்றும் படைப்புகள் முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடாது. புதிய வடிவமைப்பாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையாக அமைந்திருந்தது

இது தவிர திணைக்களம் வழங்கிய பொதுப் பாடலையும் பாட நிபந்தனையும் இடப்பட்டிருந்தது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் இடத்தைப் பெற்றுள்ள இந்த கரோல் பாடகர் குழாம் சுன்னாகம் பங்குத் தந்தை அருட்பணி நிக்சன் கொலின் அடிகளாரின் நெறிப்படுத்தலில் இயங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here