முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02.12) பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று முற்பகல் அவர் ஆஜராகியிருந்தார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் முன்னிலையான நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.







