நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள்

109
0
Spread the love

நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்களை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.

கடந்த 03 ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கடலில் மிதந்து வந்த 09 பொதிகளை கடற்படையினர் கண்டெடுத்து, அவற்றை சோதனையிட்டனர்.

இதன்போது சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், மற்றும் கைக்கடிகாரங்கள் என்பன அந்த பொதிகளில் காணப்பட்டுள்ளன.

கடத்தற்காரர்கள், கடற்படையினரின் படகினை கண்ணுற்று, பொதிகளை கடலுக்குள் வீசி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மீட்கப்பட்ட பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, நெடுந்தீவு பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here