லண்டனில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக கடந்த நவம்பர் முதலாம் திகதி மேற்கு லண்டனில் உள்ள பெல்தாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லண்டனில் புகலிட விடுதியில் வசித்து வந்த 15 வயதுச் சிறுமியே பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இலங்கையைச் சேர்நத 20 வயதுடைய இளைஞன் என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை குறித்த இளைஞன் மறுத்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







