அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் 1,054 மதத் தலங்கள், தொல்பொருள் தலங்கள் சேதம்

166
0
Spread the love

அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் 1,054 மதத் தலங்கள் மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 33 மதத் தலங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மதத் தலங்கள் மற்றும் தொல்பொருள் தலங்களை மறுசீரமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும், பேரிடரால் பாதிக்கப்பட்ட மத மற்றும் கலாசார பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here