மொனராகலை, 14ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (21) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புத்தலையிலிருந்து கபிலவத்த முருகன் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமும், புத்தலையிலிருந்து பயணித்த டிப்பர் லொரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த மூவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்







