பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

80
0
Spread the love

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (14.01) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here