78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கர நாற்காலியில் இலங்கை சுற்றிய பயணம் மன்னாரில் நிறைவு

111
0
Spread the love

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவைச் சேர்ந்த வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவர் மக்கின் முகமது அலி மேற்கொண்ட இலங்கை சுற்றுப்பயணம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (06.02) வெள்ளிக்கிழமை மன்னாரில் நிறைவடைந்தது.

மன்னார் பஜார் பகுதிக்கு வந்தடைந்த அவருக்கு மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இலங்கை 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் அனர்த்த காலங்களில் உதவியளித்த நாடுகள் மற்றும் புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி தெரிவிப்பதும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகளை வலியுறுத்துவதும் இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன தெரிவித்த முகம்மது அலி

இந்தப் பயணத்தின் போது தன்னை ஊக்குவித்த பொதுமக்கள் மற்றும் பொலிசாருக்கு நன்றி தெரிவித்ததோடு தன்னைப் போன்று அனைத்து மாற்றாற்றல் உள்ளவர்களும் சாதனை புரிய வேண்டும் எனவும் அவர்களுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். அத்தோடு மாற்றுத்திறனாளிகள் இருக்கின்ற பகுதிகளில் அரசு அதிகாரிகள் தேடிச் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு அவர்களுக்கான சேவைகள் வழங்க வேண்டும் எனவும் தன் போன்ற பல மாற்றாற்றல் கொண்ட இளைஞர்கள் சாதனையாளர்களாக இருக்கின்ற போதும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை. என்றும்
அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை தாங்களே வடிவமைத்து கொள்ள கூடிய வகையில் அவர்களை மேலே கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி மன்னார் நகரப் பகுதியில் தந்தை செல்வநாயகத்தின் சிலை அருகே இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம், சுமார் 1500 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரப் பாதையில் முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் ஆரம்பித்த இடத்திலேயே முடித்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here