பாகிஸ்தானின் மசூதியில் தற்கொலை குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

142
0
Spread the love

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று ஜும்மா தொழுகை நடைபெறும்போது, ஒரு  மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் 169 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தர்லாய் பகுதியில் உள்ள கதீஜாதுல் குப்ரா மசூதியின் நுழைவாயில் அருகே குண்டுதாரி வெடிவிபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலை பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கடுமையாக கண்டித்துள்ளார். குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here