மன்னார் கடலில் சுற்றிவளைக்கப்பட்ட போதைப்பொருள் படகு

218
0
Spread the love

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த டிங்கி படகிலிருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகும் சந்தேகநபர்களும் தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here